கோவை, மார்ச் 16 – பேரூராட்சி பகுதியில் பத்தாண்டுக ளுக்கு மேலாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணிநிரத்தரம் செய்ய வலியுறுத்தி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐ டியு உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தினர் கோரிக்கை மனு அளித்தனர். சிஐடியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத் தினகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகளில் 1500க்கும் மேற் பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலம் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பா லனோர் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையில் தூய்மைப்ப ணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழி லாளர்களுக்கு இதுவரை எந்தவித மான சட்ட சலுகைகளும் வழங்கப்பட வில்லை. இவர்களுக்கான காலமுறை ஊதியம், பணிநிரந்தரம், இஎஸ்ஐ, பிஎப், காப்பீடு உள்ளிட்ட சலுகைக ளும், பண்டிகைகால போனஸ், விழா கால விடுப்பு, வார விடுமுறை ஆகியவைகள் வழங்கப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்திருந்தனர். முன்னதாக குருடம்பாளையம், நரசிம் மநாயக்கன்பாளையம், பட்டனம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலி ருந்து இருந்து ஏராளமான துப்பு ரவு பணியாளர்கள் ஆட்சியர் அலுவ லகத்திற்கு வந்திருந்தனர்.