tamilnadu

விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

ஈரோடு, ஆக. 7- ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை யில் உள்ள விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சி முதலாம் மண்டலம் பெருமாள்மலையில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு  வரை அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வரு கின்றது. இப்பள்ளிக்கான விளையாட்டு மைதானத் தில் செடிகள் முளைத்து காணப்படுவதால் பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.  இதேபோல் பொதுமக்களுக்கான விளையாட்டு திடல் அதே பகுதியில் உள்ளது. இந்த விளையாட்டு திடலை அங்குள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு களை கட்டி வசித்து வருவதால் இளைஞர்கள் விளை யாடுவதற்கு மைதானம் இல்லாமல் பரிதவித்து வரு கின்றனர். எனவே பள்ளிக்குச் சொந்தமான விளை யாட்டு மைதானத்தை மாவட்ட நிர்வாகம் சீர மைத்து கொடுக்க வேண்டும் என்பதோடு, பொது மக்களுக்கான விளையாட்டு திடலில் உள்ள ஆக் கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் தடுப்பு அமைக்க  வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகத் தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

;