tamilnadu

img

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கீழடி நிழற்படக் கண்காட்சி

திருப்பூர், ஜன. 31 - திருப்பூரில் நடைபெற்று வரும் 17ஆவது புத்தகத் திருவிழாவில் தமிழகஅரசு தொல்லி யல் துறை சார்பில் கீழடி தொல்லியல் அகழ் வாய்வு நிழற்படக் கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2020 வியாழனன்று கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் தொடங்கியது. இந்நிலை யில் இரண்டாவது நாளானவெள்ளியன்று ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்து டன் புத்தகக் கண்காட்சியைக் கண்டு களித்தனர்.  இந்த கண்காட்சி அரங்கில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் கீழடி தொல்லி யல் அகழாய்வு விபரங்கள் அடங்கிய நிழற்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள் ளது. புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்கள், புத்தக ஆர்வலர்கள் இந்த தொல்லியல் கண்காட்சியை ஆர்வத்து டன் கண்டுகளித்தனர். இந்த கண்காட்சி யில் மதுரை அருகே கீழடியில் அகழாய்வு செய்த பகுதி, அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலப்  பொருட்கள் உள்ளிட்ட விபரங் கள் நிழற்படங்களில் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன. அத்துடன் இந்த அகழாய்வு தொடர்பான விபரங்களும்  பதிவு செய்யப் பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவுக்கு வரும் இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் நிழற்படங்களைப் பார்வையிட்டு, கீழடி பற்றிய குறிப்புகளையும் வாசித்துச் செல் கின்றனர்.

;