ஏற்காடு, ஆக. 28- ஏற்காட்டில், மாதாந்திர மனு நீதி திட்ட முகாம் புதனன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காடு, நாகலூர் கிராமத்தில் மாதாந்திர மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில், வட்டாட் சியர் முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் மாறன் கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டனர். இம்முகாமில் விதவை உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, நலிந்தோர் உத வித்தொகை, மாதிரி பள்ளியின் தடுப்பு சுவர் கள் கட்டுவது மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தரக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.