tamilnadu

img

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டனர்

திருப்பூர், ஏப். 16 –திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் அனுமதி இன்றி விவசாய நிலத்தில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் பதிப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு வந்த பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தின் ஊழியர்களை விவசாயிகள் சிறைபிடித்தனர்.பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் பெட்ரோல் கொண்டு செல்லும் பைப்லைன் திட்டம் கோவை இருகூர் முதல்கர்நாடகா தேவனகொத்தி வரை ரூ.678கோடி மதிப்பீட்டில் 294 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருப்பூர், ஈரோடு, சேலம்,நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி வழியாகசெல்லும் விதமாக திட்டம் தீட்டப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளாக விவசாய நிலங்களில் அளவிடும் பணி தற்போது தொடங்கிஉள்ளது. இதில் விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கும் என்பதால் இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐடிபிஎல் பெட்ரோல் குழாய் எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இத்திட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.குறிப்பாக இந்த குழாய் பதிக்கும் 60 அடி தூரத்திற்கு வேர்கள் அதிகம் செல்லும் மரங்கள் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுவதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாமல் போகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


பெட்ரோல் குழாயில் பாதிப்பு ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட விளைநிலத்தின் விவசாயிகளே பொறுப்பேற்க வேண்டும் என கூறப்படுகிறது. எனவே ஐடிபிஎல் பெட்ரோல் குழாய்களை விவசாய நிலங்களைத் தவிர்த்து நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்ல வேண்டும். இத்திட்டத்திற்காக நிலம் அளவீட்டு பணிகளை நிறுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் ஏப். 15ஆம் தேதி திங்களன்று காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் மற்றும் கண்டியன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பீபிசிஎல் நிறுவன ஊழியர்கள் என தெரிவித்து, மூன்று குழுவினர் விவசாயநிலங்களில் அளவிடும் பணிகளை மேற்கொள்ள வந்தனர். இதனை அறிந்த நல்லிபாளையத்தில் அளவீடு பணி செய்ய வந்த 5 ஊழியர்களை சிறைபிடித்து வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்றிணைந்து, விவசாய நிலத்தில் அனுமதி இன்றி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.கூட்டியக்க விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற காங்கயம் காவல் துறையினர் விவசாயிகளிடம் புகார் மனு கொடுங்கள், வழக்குப் பதிவு செய்கிறோம் எனத் தெரிவித்து அளவீடு செய்ய வந்த ஊழியர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

;