tamilnadu

img

சேவகன், காவலாளி என நாளுக்கு ஒரு வேடத்தில் மோடி உ.வாசுகி குற்றச்சாட்டு

கோவை, ஏப். 12 – மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சேவகன், காவலாளி என நாளுக்கு ஒருவேடமிட்டு மோடி மக்களை ஏமாற்றி வருவதாக சிபிஎம்மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டினார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, ஆவாரம்பாளையம் இளங்கோநகர் பகுதியில் வாக்கு சேகரித்துபேசுகையில், கடந்த ஐந்தாண்டு காலமோடியின் ஆட்சி நிறைவடைய உள்ளது. மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் என கேட்டு வருகிறார். கடந்தநாடாளுமன்ற தேர்தலில் ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை தருவேன் என்றவர் இருக்கிற வேலையையும் பறித்துவிட்டு, பக்கோடோ விற்பதும் வேலைதானே என ஏளனமாக பேசுகிறார். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று வாக்குறுதியளித்தவர் இப்போது அது ஜூம்லா என்கிறார். அப்படியென்றால் தமிழில் சும்மா என்று அர்த்தமாம். மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சி முழுவதும் சும்மா ஆட்சியே நடந்துள்ளது.


வளர்ச்சியின் பெயரால் வாக்குகளை பெற்று கார்ப்ரேட்டுகளின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மோடி. விவசாய கடன், மாணவர்களின் கல்விக்கடன்களை ரத்து செய்ய முடியாது என்கிறவர். 3 லட்சம்கோடி ரூபாய் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்ரேட்டுகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகளின் தற்கொலை, சிறுகுறு தொழில்கள் முடக்கம் என ஒட்டுமொத்த இந்தியநாட்டையே பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளார் மோடி. தேர்தலுக்கு முன்பு டீ விற்பவர் என்றார். தேர்தலில் வென்றபோது நான் பிரதமர் அல்ல மக்களின்சேவகன் என்றார். பின்னர் ஏழைத்தாயின் மகன் இப்போது சௌகிதார் (காவலாளி) என்கிறார். நாளுக்கு ஒரு வேடமிட்டு மக்களை ஏமாற்றி வரும் மோடியைவீட்டுக்கு அனுப்ப நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழைப்பாளி மக்களின் உரிமைக்காகவும், எந்நேரமும் மக்களின் ஒருவராக இருந்துகளப்பணியற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அவர்களுக்கு வாக்களித்து மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என உ.வாசுகி தனது உரையை நிறைவு செய்தார்.

;