கோவை:
ஆப்கன் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் அவர்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்து சென்றுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசின்முறையான திட்டமிடல் இல்லாத தும், ஆப்கனில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் என்கிற விபரமே ஒன்றிய அரசிடம் இல்லாதும் அங்குள்ள இந்தியர்கள் தவிப்பிற்குகாரணமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநி லக்குழு கூட்டம் கோவையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. காந்திபுரத்தில் தனியார் அரங்கத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில் செவ்வாயன்று துவங்கிய மாநிலக்குழு கூட்டத்தில் கட்சியின் அகிலஇந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் கையாலாகாத தன்மையால் இந்த பணிகள் தொய்வடைந்துள்ளன. டிசம்பர் 31க்குள் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்துவதே இலக்கு என ஒன்றியஅரசு தெரிவித்தது. அது தற்போதுசாத்தியமில்லை என்பது தெளி வாகிறது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசிசெலுத்தப்பட வேண்டும். ஆனால்அப்படி ஏதும் இப்போது நடக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தின் முதல்வர்கூட செங்கல்பட்டு, குன்னூர் நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டார். இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு செவிமடுக்கவில்லை. மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளையும் அனுமதிக்கவில்லை. தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான தகவலை ஒன்றிய அரசு தெரிவிப்பதில்லை. இது மூன்றாவது அலையை மோடி அரசு வரவேற்பது போல் இருக்கிறது.
நோடேட்டா கவர்மெண்ட்
கொரோனா தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார தேக்கம், வேலையின்மை அதிகரித்துள்ளது. சிறுகுறு தொழில் அதிகம் உள்ள கோவை உள்ளிட்ட பல இடங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து எந்த புள்ளி விபரங்களும் இந்த அரசிடம் இல்லை. நோ டேட்டா கவர்மெண்டாக மோடியின் ஒன்றியஅரசு உள்ளது.
வரியை குறைத்தால் விலையை குறைக்க முடியும்
அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதுகுறித்து இந்த அரசிற்கு எந்த கவலையும் கிடையாது. பெட்ரோலியப் பொருட்களுக்கு கலால் வரியை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆயுள் பத்திரத்தின் கடனைஅடைப்பதற்காகவே கலால் வரியைஉயர்த்தி வருவதாக தெரிவித்திருக் கிறார். அந்த அரசின் மொத்த எண்ணெய் கடன் தொகை ரூ.1.56 லட்சம் கோடி மட்டுமே. ஆனால் 2020 மற்றும் 2021ல் இந்த ஒன்றிய அரசு ரூ.3.71 லட்சம் கோடியை கலால் வரியின் மூலம் வருவாயாக ஈட்டியுள்ளனர். கடந்த 7 வருடத்தில் 15.6 லட்சம் கோடி ரூபாய் வருவாய்
தொடர்ச்சி 3ம் பக்கம்