திருப்பூர், பிப். 25 - திருப்பூர் தெற்கு மாநகரம் ராயபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கக் கிளை சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட் ்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்டப் பொருளாளர் அ.ஷகிலா, தெற்கு மாநக ரத் தலைவர் மினி, முன்னாள் மாவட்டச் செயலாளர் விஜயா உள்பட பெருந்திரளான பெண்கள் பங்கேற்று எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, அதைச் சுற்றி ஒப்பாரி வைத்து, விலை உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர்.