tamilnadu

img

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணா

நாமக்கல், செப்.25- அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி எலச்சிபாளையம் பேருந்து  நிலையம் அருகில் புதனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.   எலச்சிபாளையத்தை மையமாக  கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை  கடந்த 13 ஆண்டுகளாக இயங்கி  வந்தது. தற்போது குமாரமங்கலத் திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து இப்பகுதியில் 108  ஆம்புலன்ஸ் இயக்கிட நடவடிக்கை  எடுக்க வேண்டும். தேசியமயமாக்கப் பட்ட புதிய வங்கி கிளையை துவங்க வேண்டும். எலச்சிபாளையம் பேருந்து  நிறுத்தத்தில் கழிப்பிடம்,  நிழற்குடை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.  கொத்தமபாளையம் தரைப்பாலத்தை  மேம்பாலமாக மாற்றி அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். சமத்துவ புரம், செக்கான்காடு பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் அமைக்க வேண்டும். சூரப்புலிஅம்மன் கோவில்  தெரு, ராஜகணபதிதெரு, தொரட்டிக் காடு.

அகரம், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை  மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். காவிரி குடிநீர்  கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடந்த 2 ஆண்டு காலமாக முதி யோர் ஓய்வூதியம் கேட்டு மனு அளித்த  அனைவருக்கும் ஓய்வூதியம் உடனடி யாக வழங்க வேண்டும். காவல் நிலையம் பின்புறம் உள்ள நூலக கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும்.   ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தடுத்து நிறுத்த வேண்டும். முக்கிய சாலை களில் விபத்தை தடுக்க  வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி எலச்சிபாளையம் பேருந்து நிலையம் அருகில் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  இந்த தர்ணா போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமை வகித் தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் பி.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். ஒன்றியச்  செயலாளர் சு.சுரேஷ்,  ஒன்றியக்குழு உறுப்பினர் கே.எஸ்.வெங்கடாசலம், ஆர்.ரமேஷ் மற்றும் கிளை செயலா ளர்கள் ஏ.சந்திரன், பி.ஜெயந்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறை வாக பி.கிட்டுசாமி நன்றி கூறினார்.  பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.