tamilnadu

img

சர்வாதிகார மோடி, ஊழல் பழனிசாமியை வீட்டிற்கு அனுப்புவோம்

தருமபுரி, ஏப்.9-சர்வாதிகார மோடி, ஊழல்ஆட்சி எடப்பாடி பழனிசாமியைவீட்டிற்கு அனுப்ப மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பீர் என அரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்சிபிஎம் மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரூர் ரவுண்டானா அருகில் பிரச்சார பொதுக்கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் தலைமை வகித்தார். ஒன்றியசெயலாளர் ஆர்.மல்லிகா வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது, தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும்ஆட்சிக்கு வந்தால், அடுத்து நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடியாது. சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். அம்பேத்கார் உருவாக்கிய சட்டத்தை காலில்போட்டு மிதிக்கிற அரசாகத்தான் உள்ளது. எனவே மோடியை வீட்டிறகு அனுப்ப வேண்டும். அதேபோல், தமிழகத்தில் ஊழல் அடிமை ஆட்சி எடப்பாடி பழனிசாமியையும் வீட்டிற்கு அனுப்பும் நாள்வந்துவிட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால் விவசாயக் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இதேபோல், கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.கடந்த 5 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் பயன் பெறும் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி எதையும் செய்யவில்லை. நாடாளுமன்றமும் செல்லவில்லை. மக்களின் கோரிக்கை குறித்ததும்பேசவில்லை. எனவே, தமிழகத்திலும், மத்தியில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற, திமுக தலைமையிலானமதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் அரூர்தொகுதிவேட்பாளர் செ.கிருஷ்ணகுமாருக்கும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் எஸ். செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இக்கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், திமுகமாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்எ, மாநிலசட்ட தீர்மானக்குழு உறுப்பினர் கீரை.எம்.எஸ்.விஸ்வநாதன் எம்எல்ஏ,. நகர செயலாளர் ஆர்.என.செழியன், ஒன்றிய செயலாளர்கள் சி.தேசிங்குராஜன், சண்முகநிதி, இ.டி.டி.செங்கண்ணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோ.வி.சிற்றரசு, மதிமுக மாவட்ட செயலாளர் அ.தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன், மாவட்ட துணை செயலாளர் காசி.தமிழ்குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன், தொகுதி செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிமாவட்ட செயலாளர் செந்தில்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் ஜெ.சிவப்பிரகாசம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சலீம், சமூக சமத்துவப்படை மாவட்டச்செயலாளர் சா.புத்தமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மொரப்பூர் கே. தங்கராசு, பாப்பிரெட்டிபட்டி சி.வஞ்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டகுழு உறுப்பினர் பி.வி.மாது நன்றிகூறினார்.

;