சேலம்,பிப். 27- சேகோசர்வ் சார்பில் ஜவ்வரிசியின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜவ்வரிசி தினத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவ்வரிசியின் நன்மைகள் குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மர வள்ளிக்கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் சேகோசர்வ் சார்பில் ஜவ்வரிசி தினம் வியாழ னன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் நிர்வாகிகள் கூறியதாவது, சேகோசர்வ் சார்பில் ஜவ்வரிசி தினம் ஒரு வார காலத்திற்கு கொண்டாடப் படுகிறது. இதன் மூலம் ஜவ்வரிசியின் நன்மைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.400 கோடி வருவாய் ஈட்டிய சேகோசர்வ் நடப்பாண்ட்டில் ரூ.940 கோடி ஈட்டியுள்ளது. மேலும் ஜவ்வரிசியை அதிக அளவில் வட இந்தியர்களே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தமிழக மக்களும் அதிகம் பயன்படுத்தும் வகையில் அனைத்து நியாயவிலை கடைகள் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்க அரசு நடவ டிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜவ்வரிசி சமையல் செய்முறை கையேட்டினை வெளியிட்ட தமிழ் மணி ஜவ்வரிசியினால் தயாரிக்கப்பட்ட உணவு வகை களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேலம் சேகோசர்வ் நிர்வாக மேலாளர், அலுவலகப் பணி யாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.