திருப்பூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய தலைமுறை தொழில்முனைவோர் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான திட்ட முதலீட்டில் 25 சத விகித மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று புதிய தொழில் துவங்குவதற்கான பயனாளிகள் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த் திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், துணை இயக்குநர் திருமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.