tamilnadu

img

சிறுமி படுகொலை விவகாரம் விசாரணையை தீவிரப்படுத்திடுக

கோவை, மே 6–துடியலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றத்தை மறைத்த குற்றவாளிகளின் உறவினர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மாதர்சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்களன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.இதன்பின் மாதர் சங்கத்தினர் கூறுகையில், கடந்த மாதம் கோவைதுடியலூர் பன்னிமடையில் ஆறுவயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த குற்றவாளி பாட்டியின் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி இறந்த அன்றைய தினமே சந்தோஷ்குமாரின் பாட்டி மர்மமான முறையில்இறந்தார். சந்தோஷ்குமார்சம்மந்தப்பட்ட சிறுமியை பாட்டியின் வீட்டில் வைத்து பலாத்காரம்செய்தகொடூர சம்பவத்திற்குபாட்டி தடையாக இருந்துள்ளார்என்றும், இதனால் பாட்டியையும்சந்தோஷ்குமார் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவேகாவல்துறையிடம் இதுகுறித்துவிசாரணையில் தெரிவித்துள்ளோம். ஆனால் இப்போது பாட்டியின் மரணம் குறித்த எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாதது காவல்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குழந்தையின் இறப்பு குறித்து சந்தோஷ்குமாரின் ரத்த உறவுகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் ஒன்றிணைந்து குற்ற சம்பவத்தை மறைக்க முயற்சிக்கிறார்கள் என மாதர் சங்கம் கருதுகிறது. ஆகவே இறந்த பாட்டியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்து உண்மை நிலையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்என மாதர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக இம்மனுவினை அளிக்கையில் மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மாவட்ட பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இறந்த சிறுமியின் பெற்றோர்களும் உடனிருந்தனர்.

;