tamilnadu

img

3 நாட்களாக வருமான வரித்துறையினர் நெருக்கடி திமுக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதி

கோவை, அக். 30 -  வருமானத் துறையினர் மூன்றாவது நாளாக விசா ரணையை தொடர்ந்த நிலையில் தீடீரென  ஏற்பட்ட நெஞ்சு வலியால் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்கின்ற கிருஷ்ணன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பா ளராக உள்ள பையா என்ற கிருஷ்ணன் வீட்டில், கடந்த புதன்கிழமையன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில் வரு மான வரித்துறையினர் எதிர்பார்த்த எதுவும் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்திக்குள் ளான அதிகாரிகள், பையா என்ற கிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் புதன், வியாழன் என இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசா ரணை மூன்றாவது நாளாக வெள்ளியன்றும் தொடர்ந்தது.  

இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகளின் கடந்த மூன்று நாட்களாக கடும் நெருக்கடி அளித்த நிலையில், பையா என்கிற கிருஷ்ணனுக்கு  திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடன டியாக அவர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  இதற்கிடையே, இதுகுறித்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்,நடராஜன். மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் உடல் நலன் விசாரித்தனர். மேலும், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் முன்பு நூற்றுக் கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.