tamilnadu

கோவை மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

கோவை: 47 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரித்த மாணவர்கள்

கோவை, அக்.6- மாவட்ட கல்வித்துறை சார்பில் நடந்த விதை பந்து தயாரிக்கும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இணைந்து 47 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித் துள்ளனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல்வாரம் வன பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் மாணவர்களிடையே வனத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதைப்பந்துகள் தயாரிக்க முடிவு செய் யப்பட்டது. இதன்படி ஒண்டிப்புதூர் அரசு மேல்நி லைப்பள்ளி, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 237 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் துவக்கி வைத்தார். இதில், மாணவர்கள் இயல்வாகை, வேம்பு, பூவரசு, புங்கன் மற்றும் குமிழ் தேக்கி ஆகிய விதைகளை கொண்டு 47 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்தனர். இந்த விதைப்பந்துகள் வனத்துறை உதவியுடன் கோவையின் வெவ்வேறு பகுதிகளில் வைக்க உள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் லோகாம்பாள் தெரிவித்தார்.

அவிநாசி: மூதாட்டியிடம்  நகை பறித்தவர் கைது

அவிநாசி, அக். 6- அவிநாசி அருகே சின்னக் கானூரில் மூதாட்டி யிடமிருந்து தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற வரை காவல் துறையினர் சனியன்று கைது செய்தனர். அவிநாசி அருகே கஸ்பா கானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி மனைவி பூவாத்தாள்(70). இவர் அணிந்திருந்த 6.5 பவுன் தங்கத்தாலியை கடந்த செவ்வாயன்று சின்னக்கானூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் பறித்துச் சென்றார். இது குறித்து  சேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரைத் தேடி வந்தனர்.  இதற்கிடையில், சின்னக்கானூர் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையி னர் ஆய்வு செய்தனர்.  இதில் பதிவாகியிருந்த நகை பறித்துச் சென்ற மர்ம நபரின் இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  திருப்பூர் கேவிஆர் நகரைச் சேர்ந்த தனபால் மகன் லோகநாதன்(27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து லோகநாதன் சனியன்று மாலை கைது செய்தனர். இவரிடமிருந்து 6.5 பவுன் தங்க நகையை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவிலிபாளையம் புதூரில் பனை விதை நடவு

திருப்பூர், அக். 6- திருப்பூர் மாநகராட்சி 14ஆவது வார்டு காவிலி பாளையம் புதூர் குளக் கரையைச் சுற்றிலும் 4 ஏக்கர் பரப்பளவில் பனை விதைகள் நடப்பட்டன. காவிலிபாளையம் புதூர் பனை காக்கும் இயக்கம், பொது மக்களின் ஒத்து ழைப்புடன் ஞாயிற்றுக் கிழமை அன்று பனை விதைகளை நடவு செய்த னர். காவிலிபாளையம் புதூ ரில் சுற்றுப்புறச்சூழல் பாது காப்பு நடவடிக்கையாக கடந்த 57 வாரங்கள் பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பிளாஸ்டிக் குப் பைகளை அகற்றுவது, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தல் உள்ளிட்ட பணிகள் காவிலிபாளையம் புதூரை தூய்மையான பகுதியாக மாற்றியுள்ளன. பனை நடவு பணியில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

;