tamilnadu

img

நியாய விலைக்கடையை உடனடியாக திறந்திடுக பொதுமக்கள் கோரிக்கை

உதகை, அக்.29- குன்னூரை அடுத்த அதிகரட்டி பேரூ ராட்சிக்குட்பட்ட மணியாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.  குன்னூர் தாலுகா, அதிகரட்டி பேரூ ராட்சிக்குட்பட்ட மணியாபுரம் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை 4 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டன. ஆனால், இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மணப்புரம் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோடேரி கிராமத்திற்கு நடந்தே செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதிக்கு போதிய போக்குவரத்து வசதியும் இல்லை.  இந்நிலையில் பிரதி மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிக்குள் பொருட்களை வாங்க வேண்டும், இல்லாவிட்டால் எந்தப் பொரு ளும் கிடைக்காது. எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். ஆனால் ஒரு லிட்டர் மண் ணெண்ணெய் மட்டுமே விநியோகிக் கின்றனர். ஆனால் வெளி சந்தையில் 1 லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.60க்கு விற்கப்படுகிறது. எனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு மணியாபுரம் கிராமத்தில்  கட்டப்பட்ட நியாய விலை கடையைக் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என பலகட்ட போராட்டங்களும், வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்த நியாய விலைக்கடை திறக் கப்பட்டால் குன்னக்கொம்பை, காசோலை, பொங்கலட்டி, நெடிகாடு, மணியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 500 மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள். இனியாவது அதிகாரிகள் தலையிட்டு நியாய விலை கடை திறப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

;