tamilnadu

img

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் கிடைத்தது ஊக்கத்தொகை 


ஊரடங்கின்போது பணியாற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களில், விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2,500  மற்றும் உதவியாளருக்கு தலா ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரேனோ தொற்று காரணமாக 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவை கிடைக்க நியாய விலைக்கடைகள் திறந்துள்ளன. 

ஊரடங்கின்போது பணியாற்றும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன, கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

விற்பனையாளருக்கு தலா ரூ.5,000, உதவியாளருக்கு தலா ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 
ஆனால், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விற்பனையாளருக்கு தலா ரூ.2,500 மற்றும் உதவியாளருக்கு தலா ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன் மூலம் 21,5177 விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.5.37,92,500, உதவியாளர்கள்3,777 பேருக்கு ரூ.2000 வீதம் ரூ.75,54,000 கிடைக்கும். மொத்தம் 25,294 ஊழியர்கள் பலனடைவர்.
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்துள்ளார்.