tamilnadu

img

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு மு.க.ஸ்டாலின், ராகுல், யெச்சூரி பங்கேற்பு

ராஞ்சி,டிச.29- ஜார்கண்ட் மாநிலத்தின், 11ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் ஞாயி றன்று பதவியேற்றார். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி  உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  ஜார்கண்ட் மாநில சட்ட மன்றத்  தேர்தலில் ஜார்கண்ட்  முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சி யைப் பிடித்தது. பாஜக படு தோல்வியடைந்தது. இதை யடுத்து, தலைநகர் ராஞ்சி யில் டிசம்பர் 29 ஞாயிறன்று பிற்பகல் 2 மணியளவில் பதவியேற்பு விழா நடை பெற்றது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முத லமைச்சராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு, ஜார்க்கண்ட் ஆளுநர் திரெள பதி முர்மு பதவிப் பிரமாண மும், ரகசிய காப்பு பிரமாண மும் செய்து வைத்தார். இதில் கூட்டணி கட்சி களான, காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த ரமேஸ்வர் ஓரா னும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சத்யானந்த் போகட்டாவும்  அமைச்சர்களாக பதவி யேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா வில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர்  ரகுபர் தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய  ஜனதா தளத்தின்  தேஜஸ்வி யாதவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

;