tamilnadu

img

நகைப்பட்டறை தொழிலாளர்கள் தவிப்பு - மாவட்ட நிர்வாகம் தலையிட சிஐடியு மனு

கோவை, ஜூலை 9-  கோவையில் நகைப்பட் டறை அதிகமுள்ள பகுதி தனி மைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நகைப் ப்பட்டறை தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள னர். எனவே, இதற்கு மாவட்ட ஆட்சியர் மாற்று வழி காண வேண்டும் என சிஐடியு வலியு றுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு கோவை மாவட்ட தங்கநகைத் தொழிலாளர்கள் யூனியன் சார் பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது, கோவை மாவட்டத்தில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தங்க நகை உற்பத்தியாளர்களும், 300 ஜூவல்லரி உரிமையாளர்களும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகைத் தொழிலாளர்களும் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக. கோவை மாவட்டத்தில் தெலுங்கு பாளையம்,  தொப்பம்பட்டி, ஆர். எஸ்.புரம், கெம்பட்டி காலனி, ஆற்றுப்பாலம், மற்றும் பொள் ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்களின் வாழ்வா தாரமாக இத்தொழில் திகழ்ந்து வருகின்றது.  

இந்நிலையில், கொரோனோ ஊரடங்கு மற்றும் நகைப்பட்டறை அதிகமுள்ள பகுதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதி யாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நகைப்பட்டறை தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள னர். குறிப்பாக, இத்தொழிலா ளர்கள் தங்களின் வருவாயை இழந்து வீட்டு வாடகை, மின் கட்டணம் போன்றவற்றை செலுத்த முடியாமலும், அன்றாட உணவிற்கே அல்லல்படும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, இதுபோன்ற நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி யாக உள்ள இடங்களில் நகைப் பட்டறைகளை மீண்டும் அடைக்க சொல்வதற்கு பதிலாக, அதற் கான மாற்று வழிகளை மாவட்ட ஆட்சியர் கண்டறிய வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள் ளனர். முன்னதாக, கோவை மாவட்ட தங்க நகைத் தொழிலாளர்கள் யூனி யனின் தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் சந்திரன், பொருளாளர் முத்துவேல் மற்றும் கோபாலன், பலவேசம், உள் ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

;