மதுரை:
அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயு சிலிண்டரை வினியோகம் செய்யும் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு மருத்துவ பரிசோதனை ,மருத்துவ உதவி ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்யிடம் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் மா. கணேசன் கடந்த சில தினங்களுக்கு முன் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் மதுரையில், பல ஏஜென்சி மூலம் வீடுகளுக்கு அத்தியாவசியமான சமையல் எரிவாயு சிலிண்டர் நாள்தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காலத்தில் அத்தியவாசிய பணியை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பீசா விற்பனை செய்தவருக்கு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டு அது பலருக்கும் பரவியிருக்கும் என்று செய்திகள் வந்துள்ளது. ஆகவே பல வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்யும் ஊழியர்ளுக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ உதவி, குடும்பத்திற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும் எரிவாயு சிலிண்டர் போடும் தொழிலாளர்கள் மிக குறைந்த பட்ச கூலி பெற்று அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். இவர்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பணியினை செய்து வருகிறார்கள். எனவே இந்த சுமைப்பணி தொழிலாளர்களின் சுகாதாரத்தை கருத்தில் தகுந்த ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
மேலும் மதுரை கீழமாசி வீதி பகுதியில் இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்களை இறக்குவதற்கு சுமைப்பணி தொழிலாளர்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என்றும் அப்படி இறக்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கடுமையான சொற்களைக் கொண்டு திட்டுவதும் அல்லது பணி செய்வதை தடுப்பதும் போன்ற வேலைகளை காவல்துறையினர் செய்து வருகிறார்கள். எனவே அதுபோன்ற தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. மக்களின் அன்றாடத் தேவைகளை இதுபோன்ற காலங்களில் பூர்த்தி செய்வதற்கு சுமை பணி தொழிலாளர்களின் பணி முக்கியமானது. எனவே மக்கள் தேவைக்காக பணி செய்திட சுமைப்பணி தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும்.
மேலும் சுமைப்பணி தொழிலாளர் கள் பலரும் நலவாரிய அட்டை யை புதுப்பிக்காத சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கும் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கும் அரசின் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமைப்பணி தொழிலாளர் சங்க (சிஐடியு) மதுரை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் மா. கணேசன் கூறியுள்ளார்