tamilnadu

img

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 சென்னை,நவ. 19- மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியா குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.  குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும்  வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சல னம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திரு வண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்பு ரம், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் லேசா னது முதல் மிதமான மழையும், ஏனைய கட லோர மாவட்டங்களில் லேசான மழைக்கும்  வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.