tamilnadu

img

அனுபவ நிலப்பட்டா வழங்கியது தமிழக அரசு: மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு மக்கள் நன்றி

 பொள்ளாச்சி, அக்.18-  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை குன்றுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் 210 பயனாளிகளுக்கு தமிழக அரசு வெள்ளியன்று அனுபவ நிலப் பட்டா வழங்கியது.  கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைகளில் உள்ள சர்கார்பதி, தம் மம்பதி, நாகரூத்து உள்ளிட்ட வன கிராமங்கள் மற்றும் சமவெளி கிரா மங்களில் ஏராளமான பழங்குடி யின மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். இவர்கள்,  வசித்து வரும் இடங்க ளுக்கு அனுபவ நிலப்பட்டா வழங் கக்கோரி இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கமும், பழங்குடியின மக்க ளும் தொடர்ந்து போராடி வருகின்ற னர். இந்நிலையில், வெள்ளியன்று தமிழக அரசு 210 பயனாளிகளுக்கு அனுபவ நிலப்பட்டா வழங்கி யுள்ளது. இதனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளர்களுக்கு ஆனைமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத் தில், அரசு உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழச்சியில் நேரில் சென்று வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள், ஆனைமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலக வளாகத்திற்கு சென்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.