tamilnadu

img

நாய்களால் ஆடுகள் தொடர் பலி

தாராபுரம், ஜுன் 24- தாராபுரம் பகுதியில் நாய்களால் ஆடுகள் தொடர் பலியாவதை தடுக் கக்கோரி 5 கிராம விவசாயிகள் துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாராபுரத்தை அடுத்துள்ள செங் காட்டுபுதுரில் செல்வராஜ் என்ப வரது தோட்டத்தில் சமீபத்தில் நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலியானது. இப்பகுதிகளில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கள் கடித்து பலியாகியுள் ளன. இந்நிலையில் சங்கரண்டாம் பாளையம், சிறுகிணறு, கொழுமங் குளி, கண்ணாங்கோயில், வரப்பாளை யம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இதன் பின் சார் ஆட்சியர் பவன்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. மேற்குறிப்பிட்ட 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயத்துடன் ஆடு, மாடுகளை வளர்த்து வருகி றோம். வறட்சி காரணமாக விவசா யம் பொய்த்துவிட்டதால் ஆடுகள், மாடுகள் மட்டுமே எங்களது வாழ் வாதாரமாக உள்ளது. இந்நிலையில் ஆடு, மாடுகளை இரவிலும், பகலி லும் வெறிநாய்கள் வேட்டை யாடுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, தாராபுரம் நகரில் இறைச் சிகடைகள் நடத்துபவர்கள் ஆடு, மாடுகளின் இறைச்சி கழிவுகளை நகராட்சி குப்பை காட்டில் கொட்டு கின்றனர். அந்த கழிவுகளை உண்ணும் தெருநாய்கள் வேறு உணவு உண்ணா மல் வேட்டையாடி பச்சையாக கறி  உணவுகளை உண்ணும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றன. இதன்பின்னர் பட்டிகளில் தெரு நாய்கள் புகுந்து ஆட்டின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியை கடித்து ரத்தத்தை உறிஞ்சிவிடுகிறது. எனவே விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். ஆகவே, தமிழக அரசே இப்பகுதி விவசாயிகளுக்கு ஆடுகளுக்கு இலவசமாக இன்ஸ்சூ ரன்ஸ் வசதி செய்து தரவேண்டும். மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.  இந்த மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் பவன்குமார் நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி குப்பை கிடங்கில் இறைச்சி கழிவை கொட்டுவதை தடுக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையர் லட்சுமணனிடம் மனு அளித்தனர்.