tamilnadu

img

நாலு பேர் வாக்கிங் போக, நாங்க வீடு இழந்து தெருவில நிக்கிறோம் ஊரடங்கிலும் அடங்காத அதிகாரம்

கோவை, ஜூன் 6–  பேரிடர் காலங்களில் ஆக்கிர மிப்பு அகற்றும் நடவடிக்கைகள் கூடாது என்கிற வழிகாட்டுதல் இருந்த நிலையிலும், முத்தண் ணன் குளம் அருகில் உள்ள நூற் றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களின் வீடுகளை கோவை மாநகராட்சி இடித்து தள்ளியது அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

 கோவை காந்தி பார்க் பகுதி யில் முத்தண்ணன் குளம் அமைந் துள்ளது. இந்த பகுதியில் கூடை பின்னுதல், கூலி வேலை செய் கிற ஏழை, எளிய மக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குடி யிருந்து வருகின்றனர். வாழ்வா தாரம் முழுவதும் இவர்களுக்கு நகரப் பகுதிக்குள்ளேயே இருக் கிறது. இந்நிலையில் மாற்று இடம் என குடிசை மாற்று வாரியத் தின் மூலம் நகரின் ஒதுக்கு புறமான கோவைப்புதூர், மலு மிச்சம்பட்டி, வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது. அந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.  பேருந்து வசதி கள் கூட இல்லை என்பதால் வாழ் விடத்திலேயே மாற்று இடம்  தரவேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆட்சியாளர் களிடம் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில், சனியன்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் முத்தண்ணன் குளம் பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் இருந்த மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ஆட்கள் இல்லாத வீடு களை இடிக்கும் பணிகளிலும் ஈடு பட்டனர்.

மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீட்டை வீட்டு உடனடியாக காலி செய்யும்படி எச்சரித்த அதிகாரிகள், அந்த வீடு களையும் அடுத்தடுத்து இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், எங்களுக்கு வழங்கப் பட்ட இடத்தில் போதிய வசதிகள் இல்லை. எங்களின் பிரதான தொழிலான கூடை பின்ன திரும் பவும் 18 கி.மீ வர வேண்டிய சூழல் உள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே மூன்று மாதங்களாக பசி பட்டினியோடு இருந்த நிலை யில் இப்போது அதிகாரிகள் திடீ ரென எங்களின் வீடுகளை இடித்து  தள்ளுகின்றனர். ஊரடங்கு காலம்  என்பதால் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். வாழ்வாதாரமும் இல்லை. வாழ்வதற்கு வீடு இல்லை என்கிற நிலைதான் இப் போது எங்களுக்கு. எங்கள் ஜனம் குடியிருக்கிற வீட்ட இடிச்சு இந்த குளத்தை அழகுபடுத்தி எதை சாதிக்கப் போறாங்கன்னு தெரி யல. நாலு பேரு வாக்கிங் போக எங்களை தெருவில நிறுத்துறாங்க என கண்ணீரோடு தெரிவித்தனர்.

;