tamilnadu

img

தி குவஸ்ட் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம்

அவிநாசி, நவ. 21- அவிநாசி அருகே உள்ள தி குவஸ்ட் சர்வதேசப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கால் பந்து பயிற்சி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது ‌ அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக் குட்பட்ட அவிநாசிலிங்கம் பாளையத்தில் தி குவஸ்ட் சர்வதேசப் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் கிரிஸ் டப்ளெரியே மற்றும் லாரென்ட் பெடிடா ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.