தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உதகை,பிப்.28- தமிழகத்தின் பல்வேறு இடங்க ளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தினர் சார்பில் அகில இந்திய கோரிக்கை தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலகங்க ளில் தற்காலிக ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபு ரியும் அனைவரையும் வரன்முறை படுத்திட வேண்டும். அரசு காலிப்ப ணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும். ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை ஊதிய மாற் றத்தை உறுதி செய்திட வேண்டும். வகுப்புவாத சக்திகளை முறிய டித்து மதச்சார்பின்மையை பாது காத்திட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண் டும். பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய கோரிக்கை தின நாளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியா ழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு உதகை வட்டக் கிளை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்டப் பொருளாளர் ஆனந் தன் துவக்கி வைத்து பேசி னார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சலீம் வாழ்த் திப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.ஆசரா நிறைவு செய்து பேசினார். முடிவில் கருவூ லக துறை சாரதி நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். குன்னூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் குன்னூர் வட்ட கிளை தலைவர் பி.சிவதாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் குமா ரராஜா துவக்கி வைத்து பேசி னார். அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக் கிளை செயலாளர் ஜெரோம், இணைச்செயலாளர் அமுதா ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கூடலூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கூடலூர் வட்டக் கிளை செயலாளர் சிவ பெருமாள் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஸ்ரீ பரமேஸ் வரி துவக்கி வைத்து பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக் கிளை செயலாளர் ராம்கு மார், ஊரக வளர்ச்சித்துறை ஊழி யர் சங்கத்தின் செயலாளர் ஜெய காந்தன், தமிழ்நாடு அரசு அனைத் துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் ஏராள மான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை
இதேபோல், கோவை ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத் தின் கோவை வடக்கு வட்டக் கிளை தலைவர் பால்ராஜ் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் கோவை மாவட் டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கையை விளக்கிப் பேசி னார். இதில் ஏராளமான ஊழி யர்கள் பங்கேற்று கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.