ஐடிபிஎல் நிறுவனத்தின் மூலம் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டியன்கோயில் பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று அலகுமலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள், நிர்வாகிகள் பங்கேற்று விளைநிலங்கள் வழியாக இத்திட்டத்தை நிறை வேற்ற எதிர்ப்புத் தெரிவிப்பதென தீர்மானித்தனர்.