tamilnadu

அனுப்பர்பாளையம் பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை தோல்வி

திருப்பூர், ஜன. 27 – திருப்பூர், அனுப்பர்பாளையம் வட்டார பாத்திரத் தொழிலாளர்க ளுக்கான புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவது தொடர்பாக எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகி களுடன் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அனுப்பர்பாளையம் வட் டாரப் பாத்திரத் தொழிலாளர் களுக்கான முந்தைய சம்பள ஒப்பந் தம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி யுடன் காலாவதியானது. எனவே புதிய சம்பள உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு  கோரிக்கை விடுத்திருந்தது. குறிப் பாக எவர்சில்வர் பாத்திரத் தொழி லாளர்களுக்கு 50 சதவிகிதம், பித் தளை, செம்பு மற்றும் வார்ப்பு அயிட்டங்களுக்கு 60 சதவிகிதம், ஈயப்பூச்சு அயிட்டங்களுக்கு 70 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்க ளின் கூட்டுக்குழு சார்பில் பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடந்த 13ஆம் தேதி கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன், தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் திங்க ளன்று (ஜன.27) பேச்சுவார்த்தை  நடத்தினர். இப்பேச்சுவார்த்தை யில் எவர்சில்வர் முழுக்கூலி பாத் திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகி கள் கதிரேசன், ராயப்பன், குமார சாமி, மணி, விஸ்வநாதன், மூர்த்தி,  மதிவாணன், சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு சங்கத் தலைவர் சி.ஆறுமுகம், நிர்வாகக்குழு உறுப் பினர் பி.ஆறுமுகம், ஏடிபி நிர்வாகி கள் கேசவராஜ், கலைமணி, ஏஐடி யுசி நிர்வாகிகள் நாகராஜ், சுந்தர் ராஜ், எல்பிஎப் நிர்வாகிகள் வேலுச் சாமி, தர்மலிங்கம், எச்எம்எஸ் நிர் வாகிகள் திருஞானம், பாண்டிய ராஜ், ஐஎன்டியுசி நிர்வாகிகள் வி.ஆர்.ஈஸ்வரன், டி.முத்து கிருஷ்ணன், காமாட்சியம்மன் சங்க நிர்வாகிகள் டி.வி.முத்துக் கிருஷ்ணன், எஸ்.பி.அர்ச்சுனன், பிஎம்எஸ் நிர்வாகிகள் சீனி வாசன், நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தையில் பாத்திர உற்பத்தியாளர்கள் தரப் பில் 4 சதவிகிதம் உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது. முன்வைத்தி ருக்கும் 50 சதவிகித உயர்வுக்கு சம்பந்தமில்லாத அளவுக்கு  குறைவாக சம்பள உயர்வு தருவ தாக சொல்லப்பட்ட நிலையில்  இந்த பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிவடைந்தது. பித்தளை பாத்திர உற்பத்தி யாளர் சங்க நிர்வாகிகள் வரும் 29ஆம் தேதி சம்பள உயர்வு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத் துள்ளனர். இதன் அடிப்படையில் தொழிற்சங்க கூட்டுக்குழு கூடிப்  பேசி அடுத்த கட்ட நடவடிக்கை கள் பற்றி முடிவு செய்யும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

;