tamilnadu

img

உதகையில் மனித நேயம் தொடர்பான கண்காட்சி

உதகை, ஜன.24- உதகை பிரிக்ஸ் பள்ளியில் மனித நேயம் தொடர்பான கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. மனித நேய வாரவிழாவின் தொடக்க நிகழ்வாக அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியினை வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகை யில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மனித நேய வார விழா ஜன. 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மனித நேயம் தொடர்பான கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜன.25 ஆம் தேதியன்று (சனியன்று) அனைத்து மத தலைவர்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  தலைவர்களையும், சான்றோர்க ளையும் ஒன்று திரட்டி நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச்சட்ட கூறுகள் குறித்த கருத்த ரங்கமும் நடத்தப்படுகிறது. இதேபோல், ஜன.24 ஆம் தேதி தொடங்கி ஜன.30 ஆம் தேதி வரை  பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில்  மனித நேய வார விழாவானது கொண்டாடப்படுகிறது. இந்த  7 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் நாட்டி யம், நாடகம், பேச்சுப்போட்டி, கட் டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, ஒவிய போட்டி மற்றும் மாவட்ட தொழில் மையத்தில் கடன் உதவிக் கோரி விண்ணப்பித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு கடன்  வழங்கும் முகாமும் நடைபெறவுள் ளது. இந்நிகழ்ச்சியில் நிறைவு நாளில் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்படுகிறது. இந்நி கழ்ச்சியில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் குருசந்திரன், முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், தனி அலுவலர்கள் (பழங்குடியினர் நலம்) தினேஷ்குமார், தினேஷ், சாந்தினி, உதவி மக்கள் தொடர்பு அலு வலர் மனோஜ்குமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;