கோவை, பிப்.3- கோவையை அடுத்த சூலூர் முத்துகவுண்டன்புதூரில் மாசு ஏற்படுத்தி வரும் தனியார் ஆலையை மூட கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்த மனுவில் கூயிருப்பதாவது, கோவை சூலூர் அருகில் உள்ள முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் சுமார் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இந்நிலையில் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் கழிவால் நீர்,காற்று போன்ற முக்கிய நிலைகள் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்தி ணறல் போன்ற நோயால் பாதிப்படைந்து வருகிறோம். இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பல முறை புகார் அளித்திருந்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை அலைகழிக்கின்றனர். இவ்விவ காரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.