tamilnadu

img

முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு உபகரணங்கள் அனுப்பி வைப்பு

கோபி, டிச. 26- கோபிசெட்டிபாளையம் பகுதியில் வெள்ளியன்று நடைபெறும் முதற் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப் பதிவுக்கு தேவையான உப கரணங்களை வியாழனன்று காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறு கிறது. கோபிசெட்டிபாளையம் ஒன்றி யத்தில் 21 ஊரக உள்ளாட்சிகளுக்கும், நம்பியூர் ஒன்றியத்தில் 15 ஊராட் சிகளுக்கும், தூக்கநாயக்கன்பாளை யம் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள் என கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 46 ஊராட்சிக ளுக்கு வெள்ளியன்று முதற்கட்ட தேர் தல் நடைபெறவுள்ளது. இதில் கோபி செட்டிபாளையம், நம்பியூர் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு 321 வாக் குச்சாவடிகளில் முதற் கட்ட உள் ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  இதையொட்டி வாக்குப் பதி விற்கான உபகரணங்களான வாக்கு பெட்டி, வாக்குசீட்டு,விரல் மை, மாற் றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கரநாற்காலி ஆகியவை அனுப்பும் பணி நடைபெற்றது. முன்னதாக, வாக்குச்சீட்டு வைக்கப்பட்டிருந்த அறையின் சீலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையின் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மண்டல வாரி யாக வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டு உள்ளிட்ட உபகரணங் கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப் பப்பட்டது. வாக்குப்பெட்டி கொண்டு செல்லப்படும் வாகனத்தின் முன்னால் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பறக் கும் படையினர் சென்றனர்.

;