tamilnadu

img

கோவை சுங்கம் பகுதியில் இறங்கு பாலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோடு பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஆய்வு

கோவை, ஜூன் 16–  கோவை சுங்கம் பகுதியில் இறங்குபாலம் அமைக்க வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக் கையை அடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் செவ்வா யன்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆய்வு மேற் கொண்டார்.  

கோவை மாநகரில் திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பாலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு துவங்கி இராமநாதபு ரத்தை அடுத்த ஆண்டாள் திருமண மண்டபம் அருகே  முடிவடைகிறது. இடையில் இறங்குபாலம் எங்கும் இல்லாத நிலையில் சுங்கம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இறங்குபாலம் அமைக்க வேண் டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதையடுத்து, மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். இதனைய டுத்து, சுங்கம் பகுதியில் இறங்கு பாலம் அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து செவ் வாயன்று ஆய்வு மேற்கொண்டனர்.  

இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., கூறுகையில், கோவையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டு வருகிறோம். தற்போது கட்டப்படும் மேம்பாலங்கள் ஒரு இடத்தில் ஏறினால் இடையில் எங் கும் இறங்க முடியாத வகையில் அமைக்கப்படுகிறது. இடையில் வருகிற முக்கிய சந்திப்புகளில் இறங் குபாலம் அமைக்க வேண்டும் என் கிற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப் பட்டு வருகிறது.

குறிப்பாக, கோவை திருச்சி சாலையில் அமைக் கப்படும் பாலத்தில் சுங்கம் நிர்மலா கல்லூரி வழியாக செல்ல இறங்கு பாலம் அமைப்பது குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண் டோம். இதில் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் பல்வேறு ஆலோச னைகளை முன்வைத்தனர். இதுகு றித்து, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் பயன் பாட்டிற்கு ஏற்ற பாலமாக மாற்ற உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித் தார்.

;