tamilnadu

வாய்க்கால் புணரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 17 - நாமக்கலில் இராஜவாய்க்கால், குமாரபாளை யம் வாய்க்கால், மற்றும் மோகனூர் வாய்க்கால் களை நீட்டித்தல், நவீனமயாக்குதல், புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறிய தாவது, நாமக்கல் மாவட்டம், இராஜ வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க் கால் மற்றும் மோகனூர் வாய்க்கால்களின் கரை களை கான்கிரீட் சுவர் கட்டி உறுதிபடுத்தவும், வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்தவும், மதகுகளை சீரமைக்கவும், நீட்டித்தல், புணரமைத் த்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் மூலம் ரூ.184 கோடிக்கு அரசாணை பெறப்பட்டு மின்சா ரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்து ணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.  சரோஜா ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். 

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மேற்கண்ட நான்கு வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த 16 ஆயிரத்து 143 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மோகனூர் நவலடியான், மோக னூர் சம்பாமேடு, பரமத்தி வேலூர், குச்சிபாளையம், குமாரபாளையம், வெங்கரை, இராஜவாய்க்கால் ஆகிய இடங்களில் வாய்க்கால் நீட்டித்தல், மற்றும் புனரமைத்தல் பணிகளை நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

மேலும் பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய் வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா கோட்ட செயற்பொறியாளர் ஆர். கௌதமன், உதவி செயற்பொறியாளர் எஸ். செந்தில்குமார், உதவிப் பொறியாளர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.