cinema

img

நடிகர் சோனு சூட்டுக்குச்  சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு 

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையிலும், லக்கோனவிலும் சோனு சூட்டின் வீடு, அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் புதன் முதல் வெள்ளி வரை மூன்று நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோனை செய்தனர்.

சொத்து விற்பனை தொடர்பாக வரி ஏய்த்த புகாரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக முதலில் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், திரைப்படத் துறையிலிருந்து பெற்ற ஊதியம், போலியான நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றது, ஆகிய வகைகளில் அவர்  20 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்த்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தமிழிலும் ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.