tamilnadu

சேலம் அரசு மருத்துவமனையை பாதுகாப்போம் சிபிஎம் வடக்கு மாநகரக்குழு கூட்டத்தில் தீர்மானம்

சேலம், செப்.28- சேலம் மாவட்ட அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையை பாதுகாப்போம் என சிபிஎம் வடக்கு மாநகரக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் வடக்கு மாநகரக்குழுவின் கூட்டம், மாநகரக்குழு உறுப்பினர் தேவி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி பங்கேற்று மாநிலக்குழு முடிவு களை விளக்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில், சேலம்  வடக்கு மாநகரக் குழுவின் செயலாள ராக என்.பிரவீன்குமார் தேர்வு செய் யப்பட்டார்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை போதிய மருத்துவர்கள், உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மருத்துவ மனையை பாதுகாக்க வலியுறுத்தி அக்டோபர் 10 மற்றும் 13 ஆம் தேதி யன்று பிரச்சாரமும், அக்டோபர் 18 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டமும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், லீ பஜார் மேம்பாலப் பணிகள்  மற்றும் 5 ரோடு மேம்பால பணி களையும் விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். பெரியபுதூர் சுடுகாட்டை நவீன தகன மேடையாக மாற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மழை காலங்களில் மாநகர் பகுதியில் நீர் தேங்குவதை தடுத்து நிறுத்திட வேண்டும். பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும். டெங்கு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;