tamilnadu

அறிவிக்கப்படாத மின்வெட்டால் குறுந்தொழில்கள் பாதிப்பு டேக்ட் அமைப்பு கண்டனம்

கோவை, ஏப். 7– கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் குறுந்தொழில்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டேக்ட் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஊரகத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவையில் கடந்த ஒருவார காலமாக இரண்டு மணிநேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து மின் நிறுத்தம் செய்யப்படாமல் அரை மணிநேரம், ஒரு மணி நேரம் என ஒரு நாளைக்கு நான்கு ஐந்து முறை இந்த மின்வெட்டு நிகழ்கிறது. இதனால் ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திரங்கள் திடீரென மின்சார துண்டிப்பால் பழுதாவதோடு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் சேதமாகிறது.ஏற்கனவே கடும் நெருக்கடியில்உள்ள சிறு குறு தொழில் முனைவோர்கள் இந்த மின்வெட்டால் அதிர்ச்சியடைந்துள்ளோம். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர், வாங்கிய கடன் திருப்பி செலுத்த முடியாமல் இன்று வரை சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மின் வெட்டுபோக, மற்ற நேரங்களில் விநியோகம் சீராக இருந்தது. ஆனால், கடந்தஒரு வாரமாக ஒவ்வொரு பகுதியிலும்ஆறு முதல் எட்டு மணி நேரம்வரை, மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் சுமார் 40 ஆயிரம்தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, தமிழக அரசும், மின்வாரியமும் உடனடி நடவடிக்கை எடுத்து, தடையற்ற மின்சாரம்வழங்கிட வேண்டும். இல்லையென்றால் சிறுகுறுந்தொழில்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;