tamilnadu

img

சமையல் பாத்திரங்கள் மற்றும் பிவிசி உரிமையாளர் நலச்சங்க ஆண்டுவிழா

பொள்ளாச்சி, ஏப். 30- பொள்ளாச்சி வட்டார சமையல் பாத்திரங்கள் மற்றும் பிவிசி பந்தல் உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் எஸ்.சோமநாதன் வரவேற்று பேசினார். மாநிலத் தலைவர் பரமேஸ்வரன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் டி.மணிமாறன், கேரள மாநில துணைத் தலைவர் வெல்கம் பாபு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மேலும், இந்த ஆண்டு விழாவையொட்டி பொதுமக்களுக்கு இலவச அக்கு பஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

;