சென்னை,பிப்.26- சென்னை வேளச்சேரி விஜயநகரில் உள்ள ஏ.ஜி.ஆர்.குளோபல் பள்ளியின் 4வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஜி.இராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் ஜெயஸ்ரீ இராஜேந்தி ரன், இணைசெயலர் ஆர்,ஆகாஷ் ஏ.ஜி.எம் பள்ளி முதல்வர் ஜெயகாந்தி ஆகியோர் விழா வுக்கு முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் சாமுண்டீஸ்வரி ஆண்ட றிக்கையை வாசித்தார். விழாவில் இந்திய காவல்பணி அதிகாரி சுனில் குமார் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப்பேசினார். இன்றைய காலகட்டத் தில் குழந்தைகள் நல்ல அறிவாளிகளாகவும் சாதனையாளர்களாகவும் பிறக்கின்றனர். அவர்களை இந்த சமூகத்தில் நல்ல முறை யில் வளர்த்து நற்பண்புகளை கற்றுக் கொடுத்து சிறந்தகுடிமக்களாக உருவாக்க வேண்டும் என்றார். குழந்தைகள் செல்போ னில் அதிகநேரம் செலவிடுவதை பெற்றோர் கண்டுபிடித்து தடுக்கவேண்டும் என்றும் அதன் ஆபத்துக்களை சொல்லித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாநில அளவில் நடத்தப்பட்ட ஸ்பெல் பி சாதனை படைத்த 3 ஆம் வகுப்பு மாணவர் ஆதித்தியதாஸ், மனக்கணக்கு போட்டியில் சாதனை படைத்த மாணவர் ஜி.நவீந்திரன் யோக சித்திரபயிற்சியில் சாதனைபடைத்த 11ஆம் வகுப்பு மாணவர் பிரத்யூன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். இயற்கையை போற்று கின்ற வகையில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.