கோவை, ஆக. 2- மத்திய அரசு அறிமுகப்ப டுத்தியுள்ள புதிய தேசிய கல்வி கொள்கையால் இடைநிற்றல் அதிகரித்து. குழந்தை தொழிலா ளர்கள் அதிகரிக்கும் சூழல் உரு வாகும் என தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிரான அரசு ஊழியர் சங்க கருத்தரங்கில் தெரிவிக்கப்பட் டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் மறைந்த தொழிற்சங்க தலைவர் இரா. முத்துசுந்தரம் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பு கருத் தரங்கம் வியாழனன்று நடை பெற்றது. ஆட்சியர் அலுவல கம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சங்க தலைவர் வெ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் தங்கபாசு, அரசு, சம்பத்குமார், செந்தூரன், அருளானந்தம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த கருத்தரங்கில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் உமா மகேஷ்வரி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு அறி முகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்வி கொள்கை எந்த விதத்திலும் ஏற்க முடியாததாக உள்ளது. இதில் ஆசிரியர் குறைவாக உள்ள பள்ளிகள், மாணவர்கள் குறை வாக உள்ள பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக, பெண் கல்வி 200 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட சூழலில் தற்போதுதான் ஒன்றி ரண்டு பெண்கள் முட்டிமோதி கல்வி சாலையை எட்டிப்பார்த்து தங்களது ஆளுமைகளை நிரு பித்து வருகின்றனர். ஆனால் தற் போது இந்த புதிய தேசிய கல்வி கொள்கை அதற்கும் தடையை ஏற்படுத்தியுள்ளது. அருகாமை பள்ளி மூடப்பட்டு வெகுதொலை வில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்கிற சூழலால் பெண் களை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களுக்கு தயக்கம் ஏற் படும். இதனால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். தற் போது நாம் வாகனத்தில் பய ணம் செய்யும்போது பட்டறை களில், பணிமனைகளில் சிறுவர் கள் வேலை செய்வதை பார்த்து வருகிறோம். இதில் பெரும்பால னோர் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களாக உள்ளனர். இந்நிலையில் மூன்றாம் வகுப்பு துவங்கி அடுத்தடுத்து அனைத்திற்கும் பொதுத்தேர்வு என்றால் தேர்ச்சியடையாத மாண வர்கள் கல்வி சாலைக்கு செல் வதை நிறுதிவிட்டு தங்களின் குடும்பத்தின் தொழிலில் ஈடு பாட்டை செலுத்துவார்கள். இதைத்தான் மத்திய அரசு எதிர் பார்க்கிறது. குலத்தொழிலை நவீன முறையில் திணிக்க இந்த புதிய கல்வி கொள்கை வழி செய்கிறது. ஆகவே இதனை எதிர்த்த வலுமிக்க போராட் டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அத்தகைய போராட் டம் தான் நமது மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க முடியும் என நிறைவு செய்தார். இந்த கருத்தரங்கில் அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.