tamilnadu

img

காலாவதியான உப்புகள் பறிமுதல்

உதகை,ஜன.31- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மார்க்கெட், கீழ் கோத்தகிரி, சோலூர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலாவதியான உப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், தமிழ்நாடு நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பசவராஜ் ஆகியோர்  வெள்ளியன்று   கோத்தகிரி மார்க்கெட், கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ஆய்வு மேற் கொண்டு உப்பு மாதிரிகள் சேகரித்தனர். இதில் சில கடைகளில் காலாவதி உப்பு விற் பனை செய்வதும், முழுமையான தகவல் இல்லாத உப்பு விற்பனை செய்வதும், அதிக காலம் காலா வதி நாள் குறிப்பிட்டு விற்பனை செய்வதும் கண்டறி யப்பட்டது. இதனை தொடர்ந்து விற்பனையாளர் களிடம் ஆய்வாளர்கள் கூறுகையில், அயோடின் கலந்த உப்பு மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். என்றும், பதப்படுத்துதலுக்கான உப்பினை உணவின் பயனுக்காக விற்பனை செய்ய கூடாது என்றும், பாதுகாப்பான முறையில் அயோடின் கலந்த உப்பை மட்டும் விற்பனை செய்ய வும் வலியுறுத்தினர். மேலும், தரமற்ற காலாவதி உப்பு குறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட ஆட்சி யர் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கப்பட்டனர்.

;