ஈரோடு, ஜூலை 26- ஈரோடு மாவட்டத்தில் சிபிஎம், அனைத்திந்திய ஜன நாயகமாதர் சங்கம், தையல் தொழிலாளர்கள் சங்கம், இந் திய ஜனநாயக வாலிபர் சங் கம் உள்ளிட்ட அமைப்புக ளில் பல்வேறு பொறுப்புக ளில் செயல்பட்டு வந்த தோழர் கலா காலமானார். ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கலா 1993 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனார். மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து மூலப்பாளையம் பகுதியில் தொடர் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்நின்று நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து 1996 மற்றும் 2006 ஆகிய இரு முறைகள் வார்டு கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். இதற்கிடையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பல னின்றி வெள்ளிக்கிழமையன்று காலமானார்.
சிபிஎம் அஞ்சலி
இவரின் மறைவையறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. துரைராஜ், ப.மாரிமுத்து, ஆர்.கோமதி, சி.பரமசிவம், ஆர்.விஜயராகவன், ஈரோடு தாலுகா செயலாளர் எம். நாச்சிமுத்து, டி ஆர்இயு நிர்வாகி முருகேசன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.