tamilnadu

img

பாஜக அரசின் உரிமை பறிப்பு, அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கோபாவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 6 – மத்தியில் இரண்டாவது முறை யாக பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஜனநாயக உரிமைப் பறிப்பு மற்றும் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோபாவேச ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. செவ்வாயன்று திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன் பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி தலைமை வகித் தார். இதில் மோடி ஆட்சியின் கோர நடவடிக்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக் குழுஉறுப்பினர் ஆர். மைதிலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்குளி
ஊத்துக்குளி ஆர்.எஸ்.  பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் கை.குழந்தை சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்,தாலுகா செயலாளர் கே.ஏ. சிவசாமி, மாவட்ட குழு  உறு பினர் கே.சரஸ்வதி, தாலுகாகுழு உறுப்பினர்கள் காமராஜ், எஸ். கே.கொளந்தசாமி,மகேந்திரன், குன்னத்தூர் கிளை செயலாளர் ப.சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பெண் கள்உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தாராபுரம்

இதேபோல், தாராபுரம் அண்  ணாசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில் தாலுகா செயலாளர் என்.கனக ராஜ், இடைக்கமிட்டி உறுப்பினர் கள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன் னுசாமி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

அவிநாசி

அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பி .முத்துசாமி  தலைமை வகித்தார். இதில்  மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களின் அபாயங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன்,ஒன்றிய செயலாளர் எஸ். வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். பழனிச்சாமி  உள்ளிட்டோர் பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேலு சாமி, பி. கனகராஜ், ஏ.ராஜன், பழங்கரை ஊராட்சி மன்ற முன் னாள் தலைவர் எம். பழனிச்சாமி,  பி.சுப்பிரமணி, ஆர்.பாலசுப்ர மணி, கே. முருகன், வி .தேவி, பி.பழனிச்சாமி, ஏ.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

உடுமலை

லையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பி னர் தண்டபாணி தலைமை வகித் தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.சுப்பிரமணியம்,எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர்பஞ்சலிங்கம் நகரக் குழு உறுப்பினர்கள் தோழன்ராஜா, வசந்தி, மாலினி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.

மடத்துகுளம்

மடத்துகுளம் நால் ரோடு பகுதி யில் தாலுகாகுழு உறுப்பினர் ஆர்.வி.வடிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தாலுகா செயலாளர் பன்னீர்செல் வம், தாலுகாகுழு உறுப்பினர்கள் ராஜரத்தினம், செல்லதுரை, கார்த் திகேயன், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடிமங்கலம்

பெதபம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங் கினார். இதில் மாவட்டக்குழு உறுப் பினர்கள் வெ.ரங்கநாதன், கி.கன கராஜ், சிஐடியு மாவட்ட துணை  செயலாளர் எஸ்.ஜெகதீசன், ஒன் றியக்குழு உறுப்பினர்கள் ஓம்பிர காஷ், லட்சுமணசாமி, சுந்தர்ராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.