tamilnadu

img

ஒதுக்கும் நகர வாசிகள் தகர கொட்டகையில் தலித் மக்கள்

இப்பவெல்லாம் யாரு சாதி பாக்குறா என கோவை போன்ற நகரப்பகுதியில் உழைப்பாளி மக்களிடம் எவ்வித தொடர் பும் இல்லாத அப்பார்ட்மெண்ட்டில் குடி யிருக்கும் வசதிபடைத்த மனிதர்கள் போகிற போக்கில் பேசிச்செல்வதை கேட்டிருக்கிறோம். இதற்கும் சொந்த சாதியில் மணமகள், மணமகன் தேவை என பக்கம் பக்கமாய் நாளிதழ்களில் விளம்ப ரத்தை பார்த்துக் கொண்டே நகரப்பகுதி யில் சாதி பார்ப்பதில்லை இவர்கள் பேசுவ துதான் வேடிக்கை. அதுவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தீண்டாமை எந்த வடி வத்தில் எவ்வளவு உள்ளது என தீண் டாமை ஒழிப்புமுன்னணி தொடர்ந்து கள ஆய்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது. இருப்பினும் உண்மைக்கு எதிராக பேசுபவர்களுக்கு காதில் அறைகிறது கோவை சிஎம்சி காலனி பகுதி தலித் மக்களின் வாழ்க்கை.

கோவை வெரைட்டி ஹால் சிஎம்சி பகுதியில் 13 பிரிவுகளாக நான்கு மாடி யில் 432 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட அருந்ததிய மக்கள் வசித்து வருகின் றனர். இங்கு வசிக்கும் மக்களில் பெரும் பாலானோர் கோவை மாநகரம் விழிப் பதற்குள் இவர்கள் விழித்து நகரத்தை தூய்மை செய்யும் நிரந்தர மற்றும் ஒப் பந்த துப்புரவு பணியாளர்களாக உள்ள னர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால்  மிகவும் பழுதடைந்துள்ளது.  இதனையடுத்து அதே இடத்தில், மாற்று புது குடியிருப்புகளை கட்டித்தரு வதற்கான அறிவிப்பாணையை அரசு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வசித்து வருபவர்களை காலி செய்ய  கடந்த 2018ஆம் ஆண்டு  முதல் அறிவிப்பு  செய்து வருகிறது. இவர்களும் பாழ டைந்த தங்கள் வீட்டை இடித்து புதிய  வீட்டை கட்டிக்கொடுக்க போகிறார்கள். ஆகவே தற்காலிகமாக வாடகைக்கு வீடு தேடி இம்மக்கள் அலைகின்றனர். ஆனால் இப்பவெல்லாம் யாரு சாதி பார்க்கிறா என  பேசி வருகிற நகரச் சமூகம் இவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதாக இல்லை. 

இதில் கொடுமை என்னவென்றால் வாடகை, அட்வான்ஸ், எத்தனை பேர்  என்கிற நிபந்தனையெல்லாம் பேசிவிட்டு கடைசியில் சாதி நிலை தெரிந்த பின் வாடகைக்கு வீடு இல்லை என்று சொல் வதுதான் சாதிய மனநிலையின் உச்சம். ஆனால் தங்களை இழிவு படுத்துகிறார் கள், மனிதர்களாக பார்க்கவில்லை என் கிற கோப உணர்வு கொஞ்சமும் இல்லா மல் அடுத்த வீட்டை தேடிச்செல்கிறார்கள். சாதிய அடுக்கின் மீது காறித்துப்பாமல்.  இச்சூழலில் எங்கும் வீடு கிடைக்கா மல் தற்போதுள்ள குடியிருப்பு அருகி லேயே இருக்கும் மைதானத்தில் தற்காலிக குடியிருப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், சுகாதார பணியாளர்கள் என்பதால் எங்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக் கிறார்கள். சிலர் வீடு தருகிறேன் என் கிறார்கள். ஆனால் அவர்கள் கேட்கிற வாடகை, பத்து மாத அட்வான்ஸ் தொகை இருந்தால் சொந்த வீட்டை நாங்களே கட்டியிருப்போம். ஆகவே வேறு வழி யில்லாமல் எங்களது நிலையை மாநக ராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். இதனையடுத்து கட்டப்படும் குடியிருப்பு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான மைதானத்தில் தற்காலிக குடியி ருப்பை அமைக்க ஒப்புதல் கொடுத் துள்ளனர். 16 அடி நீளம், 10 அடி அகலத்தில்  தகர சீட்டில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து வருகிறோம். ஒரே அறை, இதிலேயே சமையல், குளியல் அறை என  பிரித்துக் கொண்டோம். கழிப்பிட வசதி இல்லை அருகில் உள்ள பொதுக்கழிப்பி டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது என்றனர்.  200 வீடுகள், சுமார் மூவாயிரம் பேர் வசிக்கும் இந்த பகுதியில் ஒரே ஒரு பொதுக்கழிப்பிடமா எனக் கேட்டால், வேறுவழியில்லை இந்த தகர கொட்ட கையை அமைப்பதற்கே ஒவ்வொரு வீட் டிற்கும், சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்துள்ளோம் என்கின்றனர். இதில் புதிய வீடு கட்டிப்போகும்போது தற்காலிக குடியிருப்பை முற்றிலுமாக இடித்து எப்படி மைதானமாக கொடுத் தோமோ அதேபோல திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் வேறு போட்டிருக்கிறதாம் மாநகராட்சி. சாதிய சாக்கடைக்குள் பெரும்பான்மையானோர் கிடக்க அதிகாலை எழுந்து நகரத்தில் அடைத்துக்கிடக்கும் சாக்கடையை சுத்தம் செய்ய கிளம்புகின்றனர் அப்பாவி தலித் மக்கள்.  - அ.ர.பாபு

;