சென்னை:
சிறப்பு உட்கூறு திட்ட நிதியை பயன்படுத்தி சத்தியவாணிமுத்து நகர் மக்களுக்கு புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பெருநகர சென்னை மாநகராட்சி 59வது வட்டத்தில் உள்ள சத்தியவாணிமுத்து நகர், காந்திநகர், இந்திராகாந்தி நகர் பகுதிகளில் கூவம் ஆற்றுக்கரையோரம் பல தலைமுறைகளாக குடியிருப்போர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என பெயரிட்டு நகரை விட்டு வெளியேற்றி, 40 கி.மீ.க்கு அப்பால் உள்ள பெரும்பாக்கத்தில் குடியமர்த்துகின்றனர். இது அம்மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.வலுக்கட்டாயமாக சென்னைக்கு அப்பால் குடியமர்த்துவதற்கு மாறாக, (தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அளித்த தகவலின்படி) கூவம். பக்கிங்காம்மற்றும் அடையாறு கால்வாய் ஓரங்களில்ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர் களுக்கு கேசவப்பிள்ளை திட்டப்பகுதியில் கட்டப்பட்ட 1056 வீடுகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கூவம் கரையோர ஆக்கிரமிப்பா ளர்கள் என கடைசி கட்டத்தில் அப்புறப்படுத்தப்பட்டுள்ள 191 குடும்பங்களுக் காகவது கேசவப் பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் இடம் ஒதுக்கக் கோரி துணை முதல்வரை நேரடியாக 31.12.2020 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை முதல்வர் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஆகியோரை தொடர்ந்து நேரடியாக சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியபோது, கூவம் கரையோரம் குடியிருந்த மக்களுக்காக பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் மதிப்பு ரூ.65 ஆயிரம்எனவும், கேசவப்பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பின் மதிப்பு ரூ.5 லட்சத்து 68 ஆயிரம் எனவும் வாரியம் விலை நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தனர்.கூவம் கரையோரம் இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (CRRT) ரூ.65 ஆயிரம் மட்டுமே குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு செலுத்தியுள்ளதால் மீதி தொகையை (CRRT) அல்லது தனிநபர்கள் வாரியத்திற்கு செலுத்தினால், கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் மேற்படிவீடுகள் கோரும் மக்களுக்கு ஒப்படைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்கண்ட நிதியை தனிப்பட்ட பயனாளிகளிடமிருந்து பெறுவதற்கு மாறாக CRRT-யிடம் அல்லது பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் அம்மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யுமாறு குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முறையிட்டோம்.ஆனால், குடிசைப்பகுதி மாற்று
தொடர்ச்சி 3ம் பக்கம்....