மயிலாடுதுறை, அக்.6- மயிலாடுதுறை மாவட்டம் மங்க நல்லூர் அடுத்துள்ள வழுவூர் ஊராட்சியில் தலித் மக்கள் வசிக் கும் மேலத்தெரு பகுதிக்கு மட்டும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் கடும் சிரமத்தை அனுபவித்து வந்த மக்கள் வியாழனன்று காலை மயி லாடுதுறை-திருவாரூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட மேலத்தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதிக்கு ஊராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படவில்லை. 3 மாதங்க ளுக்கு முன்பு வழங்கப்பட்ட குழம் பிய நீரும் 3 அல்லது 5 குடங்களுக் கும் மேல் தற்போது வருவதில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம், அரசு அதிகாரி களிடம் முறையிட்டும் எந்த வித நட வடிக்கையும் இல்லாததால் ஆத்தி ரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குத்தா லம் ஒன்றியச் செயலாளர் சி.விஜய காந்த் தலைமையில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், வைரவன், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கே.என்.ஸ்டாலின், கரு ணாநிதி, கிளை செயலாளர் தேவேந் திரன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட் டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணை யர் உள்ளிட்ட அதிகாரிகள் 4 நாட்க ளுக்குள் குடிநீர் பிரச்சனையை சரி செய்விடுவதாக உறுதியளித்தன் பேரில் போராட்டத்தை தற்காலிக மாக கைவிட்டு கலைந்து சென்ற னர். அலட்சியம் காட்டினால் மீண்டும் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.
துணைத் தலைவர் அராஜகம் வழுவூர் ஊராட்சியின் தலைவ ராக திமுகவைச் சேர்ந்த ஜெயலெட் சுமி ஜெயகாந்த் என்பவர் தான் பொறுப்பு வகித்து வருகிறார். ஆனால் துணைத்தலைவராக உள்ள அதி முகவைச் சேர்ந்த வி.ஜி.கே.நெடு மாறன் என்பவர் தான் ஊராட்சியை நிர்வகித்துக் கொண்டு தலித் மக்க ளுக்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை தலித் மக்களுக்கு செய்யவிடாமலும் தடுத்து வருவ தாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆளுங்கட்சியாக திமுக இருந் தாலும், அதிகாரம் எல்லாம் அதி முகவைச் சேர்ந்த வி.ஜி.கே. குடும் பத்திடம் தான் இருக்கிறது என பாதிக்கப்படும் மக்கள் வேதனை யுடன் கூறுவதோடு, தலித் மக்களை தொடர்ந்து புறக்கணிப்பதோடு, மக் கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப் பட்ட ஊராட்சி தலைவரின் அதிகா ரத்தை பறித்துக்கொண்டு ஆதிக்க உணர்வோடு செயல்படும் துணைத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலி யுறுத்தியுள்ளனர்.