கோவை, செப்.5- செக்கிழுத்த செம்மல், வஉசியின் 148 ஆவது பிறந்தநாளையொட்டி கோவை சிஐடியு சங்கத்தினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். கப்பலோட்டிய தமிழன், செக்கி ழுத்த செம்மல் என மக்களால் போற் றப்படும் தலைவர் வ.உ.சிதம்பர னார். இவர் சுதந்திரப் போராட்டத் தின் போது கைது செய்யப்பட்டு கோவை மத்தியசிறையில் அடைக் கப்பட்டு செக்கு இழுத்தார். இவர் மறைவுக்கு பிறகு அந்த செக்கு கோவை மத்திய சிறையில் நினைவு மண்டபமாக அமைக்கப்பட்டது. இங்கு குறிப்பிட்ட நாட்களில் மட் டும் மலர்தூவி மரியாதை செலுத் தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்.5 ஆம் தேதி வ.உ.சிதம்பரனாரின் 148 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மத் திய சிறையில் அவர் இழுத்த செக்கிற்கும், அவரது உருவப்படத் திற்கும், உருவ சிலைக்கும் பல்வேறு தரப்பினர் வியாழனன்று மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்ஒருபகுதியாக சிஐடியு மாவட்டக்குழுவின் சார்பில் வஉசிக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் கே.மனோகரன், ரத்தினகுமார் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.