tamilnadu

img

உழைக்கும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே குடியுரிமை சட்டம் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா குற்றச்சாட்டு

கோவை, டிச. 22 –  பொருளாதார தோல்வியில் இருந்து மக்களை திசை திருப்பவும், உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியே பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியு ரிமை சட்டம் என சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேம லதா குற்றஞ்சாட்டியுள்ளார்.  ஐடி துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் கோவையில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த சிஐடியு அகில இந்திய  தலைவர் டாக்டர் கே.ஹேமலதா சரோஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது, ஆர்எஸ்எஸ் கொள்கையை  நடைமுறை படுத்தும் நோக்கில் மத் திய அரசு குடியுரிமை திருத்த சட் டத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு வேலையின்மை, பொரு ளாதார சரிவு உள்ளிட்ட முக்கிய  பிரணச்சனைகளில் இருந்து மக் களை திசை திருப்ப குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பாஜக அரசிடம் எந்த தீர்வும் இல்லை, ஒரு அசைவும் இல்லை. மக்கள் வாங்கும் சக்தியை இழந்தி ருக்கிறார்கள். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமல் இந்த நிலையை சீர் செய்ய முடியாது. இந்த அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களால் அனைத்து தரப்பிலான தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதில் குஐராத், திருப்பூர், கோவை உள் ளிட்ட பகுதியில் உள்ள சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.  ஆனால், இவர்கள் கார்ப்ப ரேட்டுகளுக்கு மேலும் மேலும் வரிச்சலுகை, தள்ளுபடி, மானியம் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் விலைவாசி உயர்வோ, வேலையின்மை பிரச்சனையோ, தற்போது ஏற்பட்டுள்ள பொருளா தார நெருக்கடியோ தீரப்போவ தில்லை. மாறாக மேலும் நெருக்க டியையே ஏற்படுத்தும்.  இது ஒருபுறமிருக்க நாட்டில் பெண்கள், குழந்தைகள், சிறுபான் மையினர், தலித்துகள், பழங்குடி யின மக்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதி மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இத்தகைய மோசமான நிலையில் இருந்து மக்களை திசை திருப்பவே தற்போது குடியு ரிமை சட்ட திருத்தத்தை கொண்டு  வந்துள்ளது. இது உழைக்கும் மக் களை மத ரீதியாக பிளவு படுத்தும் சூழ்ச்சி ஆகும்.தற்போது இச்சட்டத் திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக இளை ஞர்கள், மாணவர்கள் இப்போராட் டத்தை முன்னெடுத்து வருகிறார் கள்.  இப்போராட்டத்தை ஒடுக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தற்போதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதில் 16 பேர் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்திலும். இரு வர் கர்நாடகத்திலும், மேலும் இருவர் இதர மாநிலத்திலும் உயிரி ழந்துள்ளனர். உழைக்கும் மக்களை பிரிக்கும் இச்சட்டத்தை உடனடி யாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதே சிஐடியுவின் நிலைப்பாடு. இச்சட்டம் அமல்ப டுத்தப்பட்டால் அனைத்து தரப்பு உழைப்பாளி மக்களும் தங்களின் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றுகளை சேகரிக்க அல்லல் படும் நிலை ஏற்படும். நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சனை களை சீர்செய்யாமல் மத்திய அரசு எத்தனை புதிய திட்டங்கள் கொண்டு வந்தாலும் மக்களுக்கு  அது பயனளிக்க போவதில்லை.  இத்தகைய நிலையில்தான் அனைத்து மத்திய தொழிற்சங் கங்களும் ஜனவரி 8 ஆம்தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, குறைந் தபட்ச ஊதியம், தொழிலாளர் நல சட்டத்தை பாதுகாப்பது, விவசாயி களின் நலன் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு அனைத்து  தரப்பில் இருந்தும் ஆதரவு அதி கரித்து வருகிறது. இந்நிலையில் ஜன.8 வேலை நிறுத்தம் அகில இந்திய பந்த் போராட்டமாக மாறும் என்றே எதிர்பார்க்கிறோம் என் றார்.  இச்சந்திப்பின் போது சிஐடியு கர்நாடகா மாநில தலைவர் வி.ஜே.கே.நாயர், கோவை மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் கோபிகுமார் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;