tamilnadu

img

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு- ஒருவர் கைது

கோபி, பிப்.4- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெம்பநாயக் கன்பாளையத்தில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த கனகராஜை காவல்துறை யினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே  உள்ள கெம்மநாயக்கன்பா ளையம் நரசாபுரத்தை  சேர்ந்தவர் கனகராஜ். இவரது வீட்டில் வனவிலங்குகளை  வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி  வைத்திருப்பதாக பங்களாபுதூர் காவல்துறைக்கு  தகவல் கிடைத்துள்ளது . இதனைத்தொடர்ந்து பங்ளாபுதூர்  காவல் துறையினர் கனராஜ் வீட்டை சோதனையிட்டதில்  பதுக்கிவைக்கப்பட்டிருந்த 76 நாட்டுவெடிகுண்டு கள் கண்டுபிடிக்கப்பட்டது.  இதனையடுத்து  நாட்டு வெடுகுண்டுகளையும் பறிமு தல் செய்த காவல்துறையினர் கனகராஜை கைது செய்தனர். இதையடுத்து  மேற்கொண்ட விசாரணையில் தனது  தோட்டம் டி.என்.பாளையம் வனபகுதிக்கு அருகில் உள்ள தால் வன விலங்குகள் அடிக்கடி உணவுதேடி தனது  விவசாய நிலங்களுக்கு வருகிறது. மேலும் காட்டுபன்றி களின் தொல்லையும் அதிகமாக இருப்பதால் அவைகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து கனகராஜை கைது செய்த பங்களா புதூர் காவல்துறையினர் கோபிசெட்டிபாளையம் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர்.

;