tamilnadu

அவிநாசி மற்றும் சேலம் முக்கிய செய்திகள்

தடையின்றி தொடரும் லாட்டரி விற்பனை

அவிநாசி, நவ. 29- தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப் பினும் குன்னத்தூர், பெருமா நல்லூர், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப் பட்ட கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு கள் மறைமுகமாக விற் பனை செய்யப்பட்டு வரு கிறது.  இதுகுறித்து வரும் புகாரை அடுத்து, போலீசார் அவ்வப் போது ஆய்வு செய்து,  வழக்குப்பதிந்து வருகின்றனர். இந்நிலை யில் அவிநாசி காவல் சரகத் திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில்  ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிக ரித்து வருவதாக பொதுமக் கள் புகார் தெரிவித்து வரு கின்றனர். குறிப்பாக சேவூர் காவல் நிலையத்திற்குட் பட்ட ஆலத்தூர் அருகே செட்டிபுதூரில் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒன்று மற்றும் மூன்று நம்பர் முடிவுகளை அறிவித்து பரி சுத் தொகையை வழங்கி வருகின்றனர். இதில் ஒரு நம்பருக்கு ரூ.100, 2 நம்ப ருக்கு ரூ.1000, 3 நம்பருக்கு  ஒரு லட்சம் ரூபாய் என வழங்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு மட்டுமே இப்ப ரிசுத் தொகை வழங்கப்ப டுகிறது, மீதியுள்ளவர்கள் பணத்தையும் இழந்து ஏமாற்றம் அடைந்து  வரு கிறார்கள்.  இதற்காக கணினிக ளுக்கு அடுத்தபடியாக தற்போது, சிறிய துண்டு சீட்டுகளை வாடிக்கையா ளர்களுக்கு வழங்கி, செல் லிடப் பேசி மூலமாகவே, அறிவிப்புகளை அறிந்து கொள்ளும் வகையில்,  ரகசியமாக இந்த தொழிலை நடத்தி வருகின்றனர். எனவே அப்பாவி ஏழை மக்களையும், கூலித் தொழி லாளர்களையும் ஏமாற்றும் விதமாக நடைபெறும் ஆன் லைன் லாட்டரி விற்ப னையை கண்டறிந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை நிரந்தர மாக  தடை செய்ய வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

வெங்காய விலை தொடர்ந்து உயர்வு

ஓட்டல்களில் ஆம்லெட், ஆணியன் தோசை நிறுத்தம்

சேலம், நவ.29- வெங்காயம் விலை உயர்வு காரணமாக சிறிய, நடுத்தர ஓட்டல்களில் ஆம்லெட், ஆணியன் தோசை நிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர்.  வடமாநிலங்களில் பெய்த கன மழையால், அங்கு பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து வழக்கமாக வர வேண்டிய பெரிய வெங் காயம் வரத்து 50 சதவிகிதம் சரிந்துள் ளது.அதேபோல் தமிழகத்தில் சின்ன வெங்காயம் விளைச்சலும் பாதிக்கப்பட் டுள்ளது.இதனால் வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.  வெள்ளிக் கிழமை நிலவரப்படி சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரிய வெங்காயம் ரூ.100 எனவும், சின்ன வெங்கா யம் ரூ.120க்கும் விற்பனை செய்யப்ப டுகிறது.இந்த விலை உயர்வால் மார்க்கெட் டில் 2 முதல் 5 கிலோ வாங்கிய வாடிக்கையா ளர்கள் கால், அரை கிலோ வாங்கி உபயோ கப்படுத்தி வருகின்றனர்.  இதேபோல் ஓட்டல்களில் ஆம்லெட், ஆணியன் ஊத்தாப்பம், ஆணியன் ரோஸ்ட், மசால் தோசை உள்ளிட்டவைகளில் பெரிய வெங்காயம் அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. பெரிய வெங்காயம் விலை உயர் வால் சிறிய, நடுத்தர ஓட்டல்களில் ஆம் லெட், ஆணியன் தோசை தயாரிப்பு குறைந் துள்ளதாக வாடிக்கையாளர் தெரிவித்துள் ளனர்.  இதுகுறித்து சேலம் ஓட்டல் உரிமை யாளர்கள் கூறியதாவது, தமிழகம் முழுவ தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் தினசரி ஆம்லெட், ஆணி யன் தோசைக்காக 200 டன்னுக்கு மேல் பெரிய வெங்காயம் செலவாகிறது. தற் போது பெரிய வெங்காயம் கடும் விலை உயர்வால் சிறிய, நடுத்தர ஓட்டல் உரிமை யாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால் ஒரு சில ஓட்டல்களில் ஆம்லெட், ஆணியன் தோசை வழங்குவதை நிறுத்தி யுள்ளனர். சிலர் வெங்காயத்திற்குப் பதில் முட்டைகோஸ் பயன்படுத்தி வருகின்ற னர்.வெங்காய விலை குறைந்தால் மட்டுமே வழக்கம் போல் ஆம்லெட், ஆணியன் தோசை வழங்க முடியும் என தெரிவித்தனர்.

கோவையில் இன்று ஆக்சிஜன் பூங்கா திறப்பு

கோவை, நவ. 29- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் “பீமா மூங்கில் ஆக்சிஜன் பூங்கா” அமைப்பதற்கான தொடக்க விழா சனியன்று (இன்று)  காலை 09.30 மணியளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கிழக்குப் பண்ணையில் நடைபெற உள்ளது.  துணை வேந்தர் முனைவர் நீ.குமார் தலைமையில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மை தலைமை வன அதிகாரி முனைவர் பாலாஜி தொடங்கி வைக்க உள்ளார் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

புளியம்பட்டி, நவ 28 –  இளம் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா புன் செய் புளியம்பட்டியில் நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பி டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விடியல் விருது கள் வழங்கும் விழா மற்றும் அப்துல்கலாம் இளம் சாதனை யாளர்கள் விருதுகள் வழங்கும் விழா புன்செய் புளியம் பட்டி விடியல் அறக்கட்டளை சார்பாக செவ்வாயன்று நடை பெற்றது. இதில் கலந்த கொண்டு பேசிய நிசப்தம் அறக்கட் டளை நிறுவனரான எழுத்தாளர் வா.மணிகண்டன் கூறுகை யில், மாணவ மாணவியர்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும் தங்களது செயல்களை  நாளை பார்க்கலாம், நாளை செய்ய லாம் என்று தள்ளிப்போடக் கூடாது. மாணவர்கள் வாழ்க்கை யில் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிக்க வேண்டும். இன் றைக்கு செல்போன் வயது வரம்பின்றி அனைவரையும் ஈர்த்து கொண்டுள்ளது. இதனுடன் அதிகம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.  மேலும் பெற்றோர்களுக்கு கூறுவது, தினமும் 2 மணி நேரமாவது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுடன் பேசுங்கள், விளையாடுங்கள். அவர் களின் குறையை, ஆசையை கேட்டறியுங்கள். அவர்க ளின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை சொல்லுங்கள். பெற் றோரை பார்த்து தான் பிள்ளைகள் வளரும். அனைத்து குழந் தைகளுக்கும் அவர்களது முதல் ரோல்மாடல் பெற்றோர்கள் தான். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல நண் பர்களாகவும், நல்ல ஆசானாகவும் திகழ வேண்டும் என்று அவர் பேசினார்.  இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் பேசுகையில், மாணவ, மாணவி யர்களுக்கு இத்தகைய பாராட்டுக்கள், விருதுகள் அவர் களை மேலும் உற்சாகப்படுத்தும். சாதனை புரிய தூண்டும். நல்ல விஷயங்களை குழந்தைகள் செய்யும் போது நாம் பாராட்டவேண்டும்.பெற்றோர் மற்றும் குழந்தைகளி டேயே புரிதல் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.அவர்களை வழிந டத்துங்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 600  மாணவ, மாணவியர்களுக்கு விருதுகள் வழங் கப்பட்டது. விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

;