குமரமங்கலம் பகுதியில் குடிநீரின்றி மக்கள் கடும் அவதி
ஜுலை 4-ல் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஜூலை 1- திருச்செங்கோடு அருகே குமர மங்கலம் பகுதியில் குடிநீரின்றி மக் கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமரமங்க லம் பகுதியில் ஈஸ்வரன் கோவில் அருகில் சுப்புராயநகர் கடந்த 15 வருடத்திற்கு முன்பு மழை நீரால் சூழப்பட்டது. இதன் காரணமாக இங்கிருந்த 250 குடும்பங்கள் ஒழுங் குகரடு என்ற இடத்தில் மாற்றப்பட் டது. அப்பகுதிக்கு இந்திரா நகர் என்ற பெயர் சூட்டப்பட்டு குடியிருப்பு கள் அமைக்கப்பட்டன. அப்பகுதியில் இன்று வரை குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. கடுமையான வறட்சியால் இப்பகுதி மக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் போக்கம் பாளையம் ஊராட்சி விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். நடந்தே சென்று தண்ணீர் கொண்டு வருவதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 87 கவுண்டம் பாளையம் ஊராட்சியில் உள்ள இப்பகுதிக்கு குடிநீர் தேவையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிப் பதற்கான குடிநீர் ரூ.450 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கிப் பயன்ப டுத்த வேண்டிய அவலநிலை உள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குமரமங்கலம் பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர் சி.சுந்தரம் தெரிவிக்கையில், போர்க்கால அடிப்படையில் இப்பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் எனவும், சாலை வசதியும், தெருவிளக்கு வசதியும் அமைத்து தர வேண்டும் என வலியு றுத்தி ஜீலை 4 ஆம் தேதி 87 கவுண் டம்பாளையம் ஊராட்சி மன்ற அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள் ளதாக தெரிவித்தார்.
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
சேலம், ஜூலை 1- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன விடுத்துள்ள அறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரி களில் அரசுஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவி யருக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகி றது. உதவித்தொகை கோரும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங் களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று 15.10.2019-க்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுக ளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். அதில் மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெற லாம் என தெரிவித்துள்ளார்.